ரூ.8.23 லட்சத்தில் புதிய பியஸ்ட்டா கார்: போர்டு அறிமுகம்

மிட் செடான் ரகத்தில் ஒரு கலக்கு கலக்கும் விதத்தில் புதிய பியஸ்ட்டா கார் வடிவமைப்பில் அசத்துகிறது.
ஹைடெக் அம்சங்கள் நிறைந்த புதிய பியஸ்ட்டா பார்த்தவுடன் பிரிமியம் கார் என்பதை நிருபிக்கிறது.
எஞ்சின் சப்தமே வராத அளவுக்கு புதிய பியஸ்ட்டா காரில் நாய்ஸ் ரெடியூசிங் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இன்டிரியர் டெக்கரேஷனில் ஃபோர்டின் கைவண்ணம் பளிச்சிடுகி்றது.
ஏபிஎஸ், இபிடி, ஏர்பேக்ஸ், ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல், வாய்ஸ் கன்ட்ரோல், குரூஸ் கன்ட்ரோல் என பிரிமியம் காருக்குரிய அனைத்து நவீன தொழில்நுட்ப அம்சங்களையும் புதிய குளோபல் பியஸ்ட்டா பெற்றுள்ளது.
இதன் ஹைவேரியன்ட் மாடலான டைட்டானியம்+ மாடலில் வாய்ஸ் ஆக்டிவேட்டட் கிளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ போல்டு மிரர்ஸ், புளூடூத் கனெக்ட்டிவிட்டி ஆகியவையும் இருப்பது பியஸ்ட்டாவின் மதிப்பை உயர்த்துகிறது.
1.5 லிட்டர் டிஐவிசிடி தொழில்நுட்பம் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களுடன் புதிய பியஸ்ட்டா சந்தைக்கு வந்துள்ளது. இதில், பெட்ரோல் எஞ்சின் 106 பிஎச்பி திறனையும் வெளிப்படுத்துகிறது. இது மைலேஜிலும் குறைவைக்காது என்று ஃபோர்டு தெரிவிக்கிறது. பெட்ரோல் மாடல் பியஸ்ட்டா லிட்டருக்கு 17 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் பியஸ்ட்டா லிட்டருக்கு 23.5 கிமீ மைலேஜையும் தரும் என்று ஃபோர்டு உறுதி கூறுகிறது.
மாருதி எஸ்எக்ஸ்-4, வோக்ஸ்வேகன் வென்ட்டோ, ஹூண்டாய் வெர்னா ஆகிய கார்களுக்கு கடும் சந்தை போட்டியை கொடுக்கும் வகையில் வந்துள்ள புதிய பியஸ்ட்டாவுக்கு 2ஆண்டுகள் அல்லது 1,00,000 கிமீ.,க்கான வாரண்டியை ஃபோர்டு கொடுக்கிறது.
புதிய பியஸ்ட்டா விலை விபரம்:
| பியஸ்ட்டா ரகம் | பெட்ரோல் | டீசல் |
| ஸ்டைல் | ரூ8.23 லட்சம் | ரூ.9.27 லட்சம் |
| டிரென்ட | ரூ.877 லட்சம | ரூ.9.77 லட்சம் |
| டைட்டானியம | ரூ.9.17 லட்சம் | ரூ.10.17 லட்சம் |
| டைட்டானியம்+ | ரூ.9.42 லட்சம் | ரூ.10.42 லட்சம் |
அனைத்து மாடல்களிலும் பெட்ரோலுக்கும், டீசலுக்கும் ஒரு லட்ச ரூபாய் வித்தியாசத்தில் விலை நிர்ணயித்துள்ளது ஃபோர்டு. புதிய பியஸ்ட்டாவை தேர்வு செய்ய வேறென்ன வேண்டும்.


Click it and Unblock the Notifications








