பியஸ்ட்டா பெட்ரோல் மாடலுக்கு ரூ.75,000 சலுகை: ஃபோர்டு

கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட குளோபல் பியஸ்ட்டா மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இருந்தாலும், மற்ற கார்களை ஒப்பிடும்போது விலை சிறிது கூடுதலாக இருப்பதால் ஆல் நியூ பியஸ்ட்டா மார்க்கெட்டில் வேகமான விற்பனை வளர்ச்சியை எட்டமுடியவில்லை.
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் பெட்ரோல் மாடல் கார்களுக்கான மவுசு மார்க்கெட்டில் குறைந்துள்ளது. அதேநேரத்தில் டீசல் கார்களுக்கான மவுசு வெகுவாக அதிகரித்துள்ளது.
எனவே, பெட்ரோல் மாடல் கார்களின் விற்பனையை அதிகரிக்க பல நிறுவனங்களும் விலை குறைப்பு, சலுகைகள் என அறிவித்து வருகின்றன.
ஃபோர்டு நிறுவனமும் பெட்ரோல் பியஸ்ட்டா விற்பனையை அதிகரிக்க கடந்த மாதம் ரூ.50,000 வரை சலுகை வழங்குவதாக அறிவித்தது.
இருப்பினும், பெட்ரோல் பியஸ்ட்டா விற்பனை மந்தமாகவே இருந்து வருகிறது. இதையடுத்து, பெட்ரோல் பியஸ்ட்டாவுக்கு கூடுதலாக ரூ.25,000 சலுகையை வழங்குவதாக ஃபோர்டு அறிவித்துள்ளது.
இதனால், பெட்ரோல் பியஸ்ட்டாவுக்கு தற்போது ரூ.75,000 சலுகையை ஃபோர்டு வழங்குகிறது. இதன் மூலம் பெட்ரோல் பியஸ்ட்டா விற்பனை உயரும் என்று ஃபோர்டு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








