டீசல் கார்களின் விலையை ரூ.10,000 வரை உயர்த்திய மாருதி!

கடந்த ஏப்ரல் மாதம் கார்களின் விலையை ரூ.9,000 வரை மாருதி உயர்த்தியது. இந்த நிலையில், கார் தயாரிப்புக்கான கச்சாப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் உற்பத்தி செலவீனத்தை தாக்கு பிடிக்க முடியாத நிலையில் மாருதி உள்ளது.
இந்த நிலையில், டீசல் கார்களின் விலையை ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை மாருதி நேற்று திடீரென உயர்த்தியது.
ஸ்விப்ட், எஸ்எக்ஸ்-4 மற்றும் ஸ்விப்ட் டிசையர் ஆகிய கார்களின் விலை ரூ.10,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ரிட்ஸ் டீசல் கார் விலை ரூ.2,000 உயர்த்தப்பட்டுள்ளதாக மாருதி செய்திதொடர்பாளர் தெரிவித்தார். அதேவேளை, பெட்ரோல் கார்கள் விலையை மாருதி உயர்த்த வில்லை.


Click it and Unblock the Notifications








