குறைந்த விலை ஆரியாவை களமிறக்க டாடா ஆயத்தம்

Tata Aria
டெல்லி: அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளும் நிறைந்த, கிராஸ்ஓவர் மாடலான 4*4 ஆரியா காரை டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்தது.

ரோடு பிரசென்ஸ் என்று கூறப்படும், சாலையில் செல்லும்போது கம்பீர தோற்றத்தை கொடுக்கும் வகையில் ஆரியாவின் வடிமைப்பு இருப்பதால், வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

அனேகம் பேர் ஆரியாவை வாங்க விரும்பினாலும், அதன் விலைதான் சற்று தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், கடந்த மாதம் 356 ஆரியா கார்கள் விற்பனையானதால், டாடா உற்சாகத்தில் உள்ளது.

விலையை காரணம் காட்டி ஆரியா பக்கம் திரும்பாத வாடிக்கையாளர்களை இழுக்கும் வகையில், குறைந்த விலை கொண்ட 4*2 ஆரியா காரை அறிமுகம் செய்ய டாடா ஆயத்தமாகி வருகிறது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 4*4 ஆரியா கார் ரூ.13 முதல் ரூ.15 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புதிய 4*2 ஆரியா காரை ரூ.12-13 லட்சம் விலையில், அதாவது 4*4 மாடலைவிட ரூ. ஒரு லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை குறைவான விலையில் புதிய ஆரியாவை களமிறக்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

இதன்மூலம், ஆரியாவின் விற்பனை கணிசமாக உயர்த்த முடியும் என்று டாடா கருதுகிறது.

ஆரியாவில் எக்கச்சக்கமான தொழில்நுட்ப வசதிகளை டாடா புகுத்தியுள்ளது. அவற்றை தவிர்த்து, தேவையான தொழில்நுட்ப வசதிகளுடன் ரூ.10 லட்சத்திற்குள் ஆரியாவை அறிமுகம் செய்தால், மார்க்கெட்டில் ஆரியா ஒரு கலக்கும் என்று சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Friday, July 15, 2011, 12:26 [IST]
English summary
Tata Motors all set to unveil its all new Tata Aria 4x2 in the Indian auto market soon. The Tata Aria 4x4 had received an enthusiastic response from the country inspite of being tagged at the relatively high price of Rs 13- 15 lakhs. Many thought at the time of its launching that the Tata Aria might not turn up as many buyers due to its steep pricing, but the Tata Aria 4x4 overcame these doubts with its June 2011 sales being recorded at 356 units. This time around the price of Tata Aria 4x2 will be less than its predecessor and it is expected to be priced around Rs 12-13 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+