செவரோலெட் பீட் டீசல் மாடல் ஜூனில் அறிமுகம்:ஜெனரல் மோட்டார்ஸ் அறி்விப்பு

By
Chevrolet Beat
மும்பை: டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட செவரோலெட் பீட் மாடல் வரும் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ் செவரோலெட் பிராண்டில் அறிமுகப்படுத்திய பெட்ரோல் எஞ்சின் கொண்ட பீட் ஹேட்ச்பேக் கார்,வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.இதைத்தொடர்ந்து, முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட எரிவாயுவில் இயங்கும் ஸ்மார்ட்டெக் எஞ்சின் பொருத்தப்பட்ட பீட் மாடல் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில்,டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட பீட் மாடல் வரும் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.இதுகுறித்து ஜெனரல் மோட்டார்சின் துணைத் தலைவர் கூறியதாவது:

"பீட் மாடல் வாடிக்கையாளர்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது.தற்போது பெட்ரோல் மற்றும் எரிவாயுவில் இயங்கும் பீட் மாடல்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து, 1.0லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட பீட் மாடலை வரும் ஜூன் மாதம் அறிமுகப்படுத்த உள்ளோம்.

இதற்காக,மஹாராஷ்டிர மாநிலம் தலேகானில் ரூ.1,000கோடி முதலீட்டில் டீசல் எஞ்சின் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இந்த தொழிற்சாலையிலிருந்து ஆண்டுக்கு 1.6லட்சம் டீசல் எஞ்சின்களை உற்பத்தி செய்ய முடியும்,"என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 16, 2011, 12:05 [IST]
English summary
The diesel vehicle mongers hereinafter has one more choice to choose from – the launch of Chevrolet Beat diesel version – General Motors in this June. This was disclosed by the company’s VP who briefed that there will be 1.0 lit diesel engine production from the same period.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+