மத்திய பிரதேசத்தில் புதிய டிரைவிங் ஸ்கூல் அமைக்கிறது அசோக் லேலண்ட்

கனரக வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற அசோக் லேலண்ட் நிறுவனம், டிரைவர்களுக்கு தரமான டிரைவிங் பயிற்சியை வழங்கும் வகையில், கனரக டிரைவிங் பயிற்சி பள்ளிகளை நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் நாமக்கல் மற்றும் டெல்லி அருகே புராரியில் அசோக் லேலண்டின் கனரக டிரைவிங் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 40,000 பேர் முறையான டிரைவிங் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்திலுள்ள சிந்த்வாரா என்ற இடத்தில் மூன்றாவது டிரைவிங் ஸ்கூலை அமைக்கிறது அசோக் லேலண்ட். இந்த டிரைவிங் பயிற்சி பள்ளிக்கு, மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கமல்நாத் சமீபத்தில் அடிக்கல் நாட்டினார்.
15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த புதிய டிரைவிங் பயிற்சி பள்ளியில் செயல்முறை மற்றும் சாலை விதிகள், கனரக வாகனங்களின் தொழில்நுட்ப விபரங்கள் குறித்து கற்றல் வழி பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்காக, நவீன கட்டமைப்பு வசதிகளுடன் இந்த பயிற்சி பள்ளி அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து அசோக் லேலண்ட் நிர்வாக துணைத்தலைவர் சேஷாயி கூறுகையில்,"டிரைவர் சமுதாயத்துடன் நெருங்கிய பிணைப்பை கொண்டிருக்கும் வகையில் புதிய டிரைவிங் ஸ்கூல் அமைக்கிறோம். டிரைவர்களுக்கு தரமான பயிற்சியை வழங்கும் விதத்தில் டிரைவிங் பயிற்சி பள்ளிகளை நடத்தி வரும் ஒரு சில நிறுவனங்களில் லேலண்ட் இருப்பது எங்களுக்கு பெருமை அளி்க்கிறது," என்றார்.


Click it and Unblock the Notifications








