அடுத்த 2 ஆண்டுகளில் டிரைவிங் ஸ்கூல்களை 400 ஆக உயர்த்தும் மாருதி

Maruti Driving Schools
இதுவரை 10 லட்சம் பேருக்கு கார் டிரைவிங் பயிற்சி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள மாருதி நிறுவனம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது டிரைவிங் ஸ்கூல்களின் எண்ணிக்கையை 400 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

கார் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாருதி நிறுவனம், பாதுகாப்பான டிரைவிங் விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நாடு முழுவதும் 192 டிரைவிங் ஸ்கூல்களையும், 6 டிரைவிங் பயிற்சி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களையும் மாருதி நடத்தி வருகிறது.

இந்த டிரைவிங் ஸ்கூல்கள் மூலம் இதுவரை 10 லட்சம் பேருக்கு பாதுகாப்பான டிரைவிங் குறித்த பயிற்சியை வழங்கியுள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது. இதில், 5 லட்சம் பேர் மாருதியின் தேசிய சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, அரசாங்கத்தின் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் பங்கெடுத்து வருகிறது. இந்த நிலையில், சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் முறையான கார் டிரைவிங் பயிற்சி கொடுப்பதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 200 டிரைவிங் ஸ்கூல்களை திறக்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாருதி மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு நிர்வாக அதிகாரி மாயன்க் பாரீக் கூறுகையில்," நாட்டில் ஆண்டுதோறும் 1,60 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே காரணம்.

வாகன விற்பனை உயர்ந்து வரும் அதேவேளையில் சாலை விதிகள் பற்றியும், பாதுகாப்பான டிரைவிங் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். எனவே, அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் புதிதாக 200 டிரைவிங் ஸ்கூல்களை திறக்க திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 16, 2011, 11:52 [IST]
English summary
Maruti Suzuki is not only India's leading carmaker but is also a company that is keen to improve road safety in the country. It is running about 200 driving schools across the country and has already trained more than 10 lakh individuals.Maruti Suzuki started a campaign to improve named as the National Road Safety Mission (NRSM) in 2008 and has trained five lakh people under this programme. In an attempt to increase its reach the carmaker has now announced plans to increase the number of its driving schools to 400 within the next 2 to 3 years.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+