எக்ஸ்டிரையல் எஸ்யூவி காருக்கு ரூ.1 லட்சம் சலுகை: நிசான் வழங்குகிறது

தனது ஹைவேரியண்ட் எக்ஸ்டிரையல் சொகுசு எஸ்யூவி காரை நிசான் நிறுவனம் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது.
இருப்பினும், எக்ஸ்டிரையல் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கமுடியாமல் திணறி வருகிறது. சக வைரியான டொயோட்டோவின் பார்ச்சூனர் எஸ்யூவி இந்திய சந்தையில் கலக்கி வருகிறது. கடந்த மாதம் 1,060 பார்ச்சூனர் கார்கள் விற்பனையாகி உள்ளது.
ஆனால், நிசான் நிறுவனம் வெறும் 35 எக்ஸ்டிரையல் எஸ்யூவி கார்களை மட்டும் விற்பனை செய்துள்ளது. தவிர, செவர்லே கேப்டிவா மற்றும் இதன் ரகத்தை சேர்ந்த மற்ற கார்களின் சராசரி விற்பனையை கூட நிசான் எஸ்யூவி எட்டவில்லை.
இதையடுத்து, விற்பனையை அதிகரிக்கும் வகையில், எக்ஸ்டிரையல் எஸ்யூவி காருக்கு ரூ.1,00,000 தள்ளுபடி சலுகை வழங்குவதாக நிசான் அறிவித்துள்ளது.
நிசான் எக்ஸ்டிரையல் எஸ்யூவி காரின் பேஸ் மாடல் ரூ.22.2 லட்சத்திலும், ஹைவேரியண்ட் மாடல் ரூ.26.5 லட்சத்திலும் விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








