ரூ.4.70 லட்சத்தில் புதிய காம்பெக்ட் எஸ்யூவி: பிரிமியர் அறிமுகம்

Premier Rio
ரூ.4.70 லட்சம் என்ற கைக்கு எட்டும் விலையில் புதிய பெட்ரோல் மாடல் ரியோ ஸ்யூவி காரை பிரிமியர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

நாட்டின் பழமையான கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பிரிமியர் நிறுவனம், குறைந்த விலை கொண்ட ரியோ என்ற எஸ்யூவி காரை விற்பனை செய்து வருகிறது. சிறிய ரக ஹேட்ச்பேக் கார் போன்று 5 பேர் மட்டும் பயணம் செய்யும் வசதிகொண்ட இந்த கார் டீசல் மாடலில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரியோவின் பெட்ரோல் மாடலை பிரிமியர் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பொதுவாக எஸ்யூவி கார்கள் ரூ.7.50 லட்சம் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. ஆனால், இந்த புதிய பெட்ரோல் மாடல் ரியோ எஸ்யூவி வெறும் ரூ.4.70 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 75.6பிஎச்பி ஆற்றலையும், அதிகபட்சம் 103.9 என்எம் டார்க்கையும் கொடுக்க வல்லது. வரிச்சலுகை பெறும் விதத்தில் இந்த கார் 4 மீட்டருக்குள்(3,900மிமீ) நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில், 5 பேர் தாராளமாக அமர்ந்து பயணம் செய்யலாம். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. சிறிய ரக எஸ்யூவி என்றாலும், ஹெட்லைட் லெவலிங் வசதி, ரியர் வைப்பர், பின்பக்க பனி விளக்குகள், லக்கேஜ் லேம்ப், டே-நைட் ரியர் வியூ மிரர் என இதிலுள்ள வசதிகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

பவர் ஸ்டீயரிங், கீலெஸ் என்ட்ரி, சைல்டு லாக் டோர், ஏபிஎஸ், இபிடி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டிருக்கிறது. பாரடைஸ் ஒயிட், ஸ்டெர்லிங் சில்வர், செர்ரி ரெட், மிஸ்டிக் பிளாக், டோபாஸ் புளூ ஆகிய 5 வண்ணங்களில் இந்த எஸ்யூவி கிடைக்கும்.

எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது என்பதால் அனைத்து சாலைகளிலும் அனாயசமாக செல்லும். சிறிய ஹேட்சபேக் கார் வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு குறைந்த விலையில் இந்த காம்பெக்ட் எஸ்யூவியை பிரிமியர் களமிறக்கியுள்ளது.

ரூ.4.70 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பெட்ரோல் மாடல் ரியோவைவிட, இதன் டீசல் மாடல் ரூ.60,000 கூடுதலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 16, 2011, 10:55 [IST]
English summary
Premier has launched Rio compact suv in India. The new compact SUV has been priced at a very attractive price tag of Rs. 4.70 Lakhs ex-showroom India. In this article, we will share detailed specifications, features, colour options and other details of Premier Rio Petrol in India. Premier Rio being a sub-4meter SUV falls in the small cars tax bracket and therefore offers such attractive price, which is almost equivalent to a B segment hatchback price in India. The Diesel variant of Rio is already available at Rs. 5.29 Lakhs ex-showroom, which is about Rs. 60,000 more than the petrol variant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+