புதிய ஸ்விப்ட் ஸ்போர்ட் ப்ராங்க்பர்ட்டில் அறிமுகம்

ஸ்விப்ட் காருக்கு உலக அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதை மனதில் கொண்டு ஸ்விப்ட்டின் பல அவதாரங்களை ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் அறிமுகம் செய்து வருகிறது.
இந்த வரிசையில் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்விப்ட் ஸ்போர்ட் காரின் புதிய மாடலை மாருதி பிராங்க்பர்ட்டில் அறிமுகம் செய்துள்ளது.
பக்கவாட்டில் இரண்டு கதவுகள் மட்டுமே கொண்ட புதிய ஸ்விப்ட் ஸ்போர்ட் மாடலை சுஸுகி பிராங்க்பர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த 2012 ஸ்விப்ட் ஸ்போர்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்விப்ட் கார் மாடல் அடுத்த ஆண்டு முதல் பிரிட்டனில் விற்பனைக்கு வருகிறது.
முகப்பில் அகலமான கிரில் பின்னணியுடன் கூடிய பனி விளக்குகள், மெட்டாலிக் பூச்சு மற்றும் அதிக வெளிச்சத்தை உமிழும் திறன் வாய்ந்த ஹெட்லைட்டுகள், 17 இஞ்ச் அலாய் வீல்கள் என அசத்துகிறது ஸ்விப்ட் ஸ்போர்ட்.
காற்றை கிழித்துக்கொண்டு அனாயசமாக செல்லும் வகையில் ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்புடன் கூடிய புதிய ஸ்விப்ட் ஸ்போர்ட் பார்த்தவுடன் இந்த கார் இந்தியா வந்துவிடாதா? என்ற ஏக்கத்தை அதிகரிக்கிறது.
தோற்றத்தில் மாத்திரம் அல்ல பிக்கப்பிலும் ஸ்போர்ட்டியாக இருக்கிறது ஸ்விப்ட் ஸ்போர்ட். ஆம், ஸ்விப்ட் ஸ்போர்ட் எஞ்சின் 134 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய ஸ்விப்ட் ஸ்போர்ட் மாடலைவிட குறைந்த அளவு புகையில் கார்பனை(147கிராம்/கிமீ) வெளியிடும். தவிர, லிட்டருக்கு 18.75 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்து எந்த தகவலையும் சுஸுகி வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications








