ஸ்கோடா ரேபிட் செடான் காரின் விலை மற்றும் சிறப்பம்சங்களின் பார்வை

இந்த பட்டியில் புதிதாக இணைந்துள்ளது ஸ்கோடா ரேபிட். பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரேபிட் மிட் மற்றும் டாப் வேரியண்ட்களில் ஆட்டோமேட்டிக் வெர்ஷனிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது ரேபிட். ரூ.6.75 லட்சம் என்ற கடும் போட்டியை கொடுக்கும் விலையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கோடா ரேபிட் ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் எலிகன்ஸ் ஆகிய 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக வந்துள்ள ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட்கள் வாரியாக விலை விபரங்கள் மற்றும் சிறப்பம்சங்களின் பட்டியலை இங்கே காணலாம்.
ஸ்கோடா ரேபிட் பெட்ரோல் மாடல் வேரியண்ட் வாரியாக விலை விபரம்:
பெட்ரோல் மாடல் மேனுவல் கியர் பாக்ஸ்:
ஆக்டிவ்: ரூ.6.75 லட்சம்
ஆம்பிஷன்: ரூ7.09 லட்சம்
எலிகன்ஸ்: ரூ.7.99 லட்சம்
பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்:
ஆம்பிஷன்: ரூ.8.09 லட்சம்
எலிகன்ஸ்: ரூ.8.99 லட்சம்
ஸ்கோடா ரேபிட் டீசல் மாடலின் வேரியண்ட் வாரியாக விலை விபரம்:
டீசல் மேனுவல் கியர் பாக்ஸ்:
ஆக்டிவ்: ரூ.7.95 லட்சம்
ஆம்பிஷன்:ரூ.8.09 லட்சம்
எலிகன்ஸ்: ரூ.9.19 லட்சம்
வேரியண்ட் வாரியாக சிறப்பம்சங்கள்:
பேஸ் வேரியண்ட் ஆக்டிவ்:
(இது பேஸ் வேரியண்ட் என்பதால் இதிலுள்ள பல அம்சங்கள் மற்ற வேரியண்ட்களில் பொதுவாக இருக்கும்)
14 இஞ்ச் அலாய் வீல்
மேனுவல் சென்ட்ரல் லாக்கிங்
மேனுவல் டிம்மிங் இன்சைடு மிரர்
முன்பக்கம் மற்றும் பின்பக்கம் பவர் விண்டோஸ்
வெப்பத்தை தடுக்கும் திறன் கொண்ட கண்ணாடிகள்
ரியர் வைன்ட் ஸ்கிரீன் டிஃபாகர்
மேனுவல் ஏசி
ரியர் ஏசி வென்ட்டுகள்
டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் ஸ்டீயரிங்
பவர் ஸ்டீயரிங்
அட்ஜெஸ்ட் வசதியுடன் முன்பக்க சீட் பெல்ட்டுகள்
முன்பக்க இருக்கை நடுவில் ஆர்ம் ரெஸ்ட்
எஞ்சின் இம்மொபைலசர்
மிட் வேரியண்ட் ஆம்பிஷன்:
ஏபிஎஸ்
ஃபாக் லேம்புகள்
ரிமோட் சென்ட்ரல் டோர் லாக்கிங்
மெட்டாலிக் பாடி பெயிண்ட்
பாடி கலரில் விங் மிரர்கள் மற்றும் டோர் ஹேண்டில்கள்
டிரைவர் பக்கம் மட்டும் ஏர்பேக்
அட்ஜெஸ்ட் வசதியுடன் டிரைவர் இருக்கை
பின் இருக்கை நடுவில் ஆர்ம் ரெஸ்ட்
ரியர் ரீடிங் லேம்ப்
டாப் வேரியண்ட் எலிகன்ஸ்:
15 இஞ்ச் அலாய் வீல்
எலக்ட்ரானிக் அட்ஜெஸ்டபிள் விங் மிரர்கள்
முன் பக்கம் டிரைவர் மற்றும் பயணிகள் பக்கம் ஏர்பேக்குகள்
முன்பக்கம் மற்றும் பின்பக்கம் ஸ்பீக்கர்கள்
ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
ஆன்போர்டு கம்ப்யூட்டர்
மேற்கண்ட வசதிகளை ஸ்கோடா ரேபிட் கொண்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள விலை விபரங்கள் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகளை அடிப்படையாக கொண்டது.


Click it and Unblock the Notifications








