வரும் 20 ந் தேதி முதல் வழக்கமான உற்பத்தி மீண்டும் துவக்கம்:டொயோட்டோ அறிவிப்பு

Toyota Logo
பெங்களூர்: உதிரிபாகங்கள் சப்ளை சீரடைந்துள்ளதால் வருகிற 20ந் தேதி முதல் வழக்கம்போல் கார் உற்பத்தியை மீண்டும் துவங்க இருப்பதாக டொயோட்டோ கிர்லோஸ்கர் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 11ந் தேதி ஜப்பானில் ஏற்பட்ட இயற்கை சீரழிவுகளால், அங்குள்ள ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. கார்களுக்கான உதிரிபாக சப்ளை அடியோடு தடைபட்டதால், டொயோட்டோ, ஹோண்டா உள்ளிட்ட ஜப்பான் நிறுவனங்கள் கார் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்தன.

இந்தியாவில் கார் உற்பத்தியை 70 சதவீதம் வரை குறைப்பதாக டொயோட்டோ கடந்த மாதம் அறிவித்தது. மேலும், கடந்த மாதம் 25ந் தேதி முதல் வரும் ஜூன் 4ந் தேதி வரை திங்கள் மற்றும் வெள்ளிக்கிழைமைகளில் உற்பத்தியை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஜப்பான் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் மீண்டும் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளதால், கார்களுக்கான உதிரிபாகங்கள் சப்ளை சீரடைந்துள்ளது. இதையடுத்து, கார் உற்பத்தியை வழக்கம்போல் துவங்க இருப்பதாக டொயோட்டோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து டொயோட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஏற்கனவே அறிவித்த காலத்திற்கு முன்னதாகவே குறைக்கப்பட்டிருந்த உற்பத்தியை வழக்கம்போல் துவங்க இருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறோம். இதன்மூலம், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு குறித்த காலத்தில் கார் டெலிவிரி கிடைக்கும்.

மேலும், உற்பத்தி இழப்பை சரிசெய்யும் வகையில் விடுமுறை நாட்களிலும் உற்பத்தி பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 17, 2011, 10:35 [IST]
English summary
Toyota today announced that it will resume production operations from May 20. After a devastating earthquake followed by tsunami on March 11, auto parts supplies from Japan has received a big jolt which forced the company to suspended production on Mondays and Fridays between April 25 and June 4.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+