கேடில்லாக் சொகுசு காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஜி.எம் முடி்வு

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் செவர்லே பிராண்டில் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்திய கார் மார்க்கெட்டின் வளர்ச்சிக்கு தகுந்தாற்போல் புதிய மாடல்களை ஜெனரல் மோட்டார்ஸ் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.
இந்தியாவில் பிரிமியம் சொகுசு கார்களுக்கான மார்க்கெட்டும் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து, கேடில்லாக் சொகுசு காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக, சர்வே ஒன்றையும் நடத்திய பின் கேடில்லாக்கை அறிமுகம் செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கூறியதாவது:
" இந்தியாவின் பிரிமியம் சொகுசு கார் சந்தை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. இதையடுத்து, போன்டியாக், புய்க் மற்றும் கேடில்லாக் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்து குறித்து ஆய்வு நடத்தினோம். இதில், கேடில்லாக் காருக்கு இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பது தெரிந்தது.
தக்க சமயத்தில் கேடில்லாக் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். மேலும், வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஆறு புதிய கார்களையும், இரண்டு இலகு ரக சரக்கு வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளோம். இந்த புதிய மாடல்கள் மூலம் இந்தியாவின் கார் சந்தையில் மேலும் முன்னிலை பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications








