மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க களமிறங்கும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்

இந்நிலையில், விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய சரக்கு வாகனங்களை பிரபலபடுத்தும் விதமாக நாடு முழுவதும் ரோடு ஷோக்களை நடத்துகிறது. முதல்கட்டமாக, மேற்குவங்கம், அஸ்ஸாம், பீகார் மற்றும் ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களில் இந்த ரோடு ஷோக்கள் 15 நாட்கள் நடக்கிறது.
அடுத்தக்கட்டமாக, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களிலும், தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ரோடுஷோக்கள் நடக்கிறது. அம்பாசடர் பேஸ் மாடலில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பிக்கப் டிரக் மற்றும் வின்னர் மினிலாரியை இந்த ரோடுஷோக்கள் மூலம் பிரபலபடுத்தப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, தற்போதுள்ள அம்பாசடர் கார் பேஸ் மாடலை அடிப்படையாகக் கொண்டு புதிய அம்பாசடர் காரை வடிவமைக்கும் பணிகள் அம்பாசடர் வடிவமைப்பு மையத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.
வரிச்சலுகை பெறும் விதத்தில் புதிய அம்பாசடர் காரின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக வடிவமைப்பு மையத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இதன்மூலம், புதிய அம்பாசடரை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தலாம். முன்பக்க வடிவமைப்பில் புதிய அம்பாசடரில் பெரிய மாறுதல்கள் இருக்காது. அதேவேளை, பின்பக்கத்தின் நீளம் வெகுவாக குறைக்கப்பட்டு, நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், புதிய அம்பாசடரை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு எதையும் ஹிந்துஸ்தான் நிர்ணயிக்கவில்லை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








