சாங்யாங் மோட்டார்சை கையகப்படுத்தியது மஹிந்திரா

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்சை கையகப்படுத்த இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் முன்வந்தது. ரூ.2,105 கோடி மதிப்புடைய சாங்யாங் மோட்டார்சின் 70சதவீத பங்குகளை வாங்கிக்கொள்வதாக மஹிந்திரா அறிவித்தது.
இதையடுத்து, கடந்த ஆண்டு இறுதியில் சாங்யாங்கை கையகப்படுத்தும் பணிகளை மஹிந்திரா துவங்கியது. பல கட்டங்களாக சாங்யாங் மோட்டார்ஸ் பங்குகளை மஹிந்திரா வாங்கியது. இந்நிலையில், சாங்யாங் மோட்டார்சை கையகப்படுத்தும் பணிகள் தற்போது முழுமை பெற்றுள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கொயாங்கோ கூறியதாவது:
"சாங்யாங் மோட்டார்சை கையகப்படுத்தும் பணிகள் முழுமை பெற்றுவிட்டன. அதேசமயம், சாங்யாங் மோட்டார்ஸ் வழக்கம்போல் சுதந்திரமாக செயல்படும். சாங்யாங் மோட்டார்சின் விஷயங்களில் தேவையின்றி மஹிந்திரா மூக்கை நுழைக்காது.
சாங்யாங் மோட்டார்சுக்கு புதிய தலைமை செயல் அதிகாரியாக(சி.இ.ஓ.,)வூயில் லீ நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை நிதி அதிகாரியாக (சி.எப்.ஓ.,) மஹிந்திராவை சேர்ந்த திலீப் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், புதிய போர்டு இயக்குனர்களாக ஆறு பேர் பொறுப்பேற்றுள்ளனர். எதிர்காலத்தில் சாங்யாங்குக்கு முதலீடுகள் மற்றும் நிதி உதவிகள் தேவைப்பட்டால் மஹிந்திரா வழங்கும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








