3,740 மீட்டர் உயர மலை சிகரத்தில் ஒர்க்ஷாப் திறந்தது மாருதி

கன்னியாக்குமரியிலிருந்து, காஷ்மீர் வரை நாடு முழுவதும் 1406 நகரங்களில் 2992 ஒர்க்ஷாப்களை மாருதி கொண்டுள்ளது. இந்த நிலையில், கார் விற்றால் போதும் என்று நினைக்காமல், வாடிக்கையாளரின் வசதியை கருத்தில்க்கொண்டு 3,740 மீட்டர் உயர மலை சிகரத்தில் புதிய ஒர்க்ஷாபை மாருதி திறந்துள்ளது.
இமாச்சல்பிரதேச மாநிலம், ஸ்பைத்தி மாவட்டத்திலுள்ள காஸா என்ற இடத்தில் உள்ள ஐஓசி பெட்ரோல் பங்குக்கு அடுத்ததாக இந்த புதிய கார் ஒர்க்ஷாப் திறக்கப்பட்டுள்ளது. உலகின் அதிஉயரத்தில் அமைந்துள்ள கார் ஒர்க்ஷாப் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
அந்த பகுதியில் நிலவும் கடும் குளிர் மற்றும் சவாலான சீதோஷ்ண நிலையை கொண்ட காஸா பகுதியில் மிகுத்த சிரத்தை எடுத்து இந்த ஒர்க்ஷாப்பை திறந்துள்ளது மாருதி. ஆண்டு்க்கு 700 கார்கள் வசதிகொண்டுள்ள இந்த ஒர்க்ஷாப், சுற்றுலா வருபவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஸாவை சுற்றியுள்ள ராங்னிக், கைபர், ஹன்சி மற்றும் லோசரிலிருந்து கீலாங் வரையிலான பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர். இந்த ஒர்க்ஷாப்புக்கு உதிரிபாகங்களை எடுத்து செல்வது கடினமானது என்பதால், போக்குவரத்து கட்டணம் மிக அதிகம். எனவே, இந்த ஒர்க்ஷாப்பில் உதிரிபாகங்கள் மற்றும் சர்வீஸ் கட்டணங்கள் மிக அதிகம்.
காஷ்மீர் மாநிலம், லே பகுதியில் உள்ள கடல்மட்டத்திலிருந்து 3,505 மீ்ட்டர் உயரத்திலிருக்கும் மாருதி ஒர்க்ஷாப் இதுவரை அதிக உயரத்தில் இருக்கும் ஒர்க்ஷாப் என்ற பெருமையை பெற்றிருந்தது. அதை தற்போது காஸா ஒர்க்ஷாப் முறியடித்துள்ளது.


Click it and Unblock the Notifications








