ஆசிய சந்தையில் நிலைக்க சிறிய ரக காரை அறிமுகம் செய்ய டோயோட்டோ தீவிரம்

By
Toyota Small Car
டோக்கியோ: ஆசிய சந்தையில் நிலையான இடத்தை பெறும் வகையில் சிறிய ரக காரை அறிமுகம் செய்ய டொயோட்டோ நிறுவனம் தீவிரமாக களமிறங்கியுள்ளது.

ஆசியாவில் சிறிய ரக கார்களின் விற்பனை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.சிறிய ரக காருடன் இறங்கினால்தான் ஆசிய சந்தையில் நிலைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.இதை உணர்ந்து கொண்ட பல சர்வதேச நிறுவனங்கள் சிறிய ரக கார்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.

சொகுசு கார் விற்பனையில் முன்னிலை வகித்தாலும்,ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ நிறுவனம் இதை சற்று தாமதமாக உணர்ந்து கொண்டுள்ளது.ஆசிய சந்தையில் நிரந்தர இடம் பிடிக்கும் வகையில் சிறிய ரக காரை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது.

இந்தோனேஷியாவில் உள்ள தனது தொழிற்சாலையில் சிறிய ரக கார் தயாரிக்கும் பணிகளை அந்நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது.சிறிய ரக கார் தயாரிக்கும் பொறுப்பை தனது அங்கமான டைஹட்சூ நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது டொயோட்டோ.

வரும் 2013ம் ஆண்டு 50,000 கார்களை தயாரிக்க டைஹட்சூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில்,70சதவீத கார்களை டொயோட்டோ பெற்றுக்கொள்ளும்.புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள சிறிய ரக கார் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எடியோஸ் காரை விட விலை குறைந்ததாக இருக்கும் என்று டொயோட்டோ தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, February 18, 2011, 12:49 [IST]
English summary
Having been severely hit by several recalls of its units, the Japanese car maker Toyota is brushing its strategy to roll out a small car from its Indonesian facility.The company may, in the event, focus this car on the fast growing Asian market and the company’s wing Daihatsu will take care of this small car venture.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+