இந்தியாவிற்கு படையெடுக்க தயார் நிலையில் சீன வாகன தயாரிப்பு நிறுவனங்கள்

By
Chinese Car
டெல்லி: இந்தியாவில் வாகன விற்பனையை துவங்குவதற்கு சீனாவை சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

கடந்த ஆண்டு இந்தியாவின் கார் விற்பனை சந்தை 30சதவீதம் வளர்ச்சி கண்டது.கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 24லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை படைக்கப்பட்டுள்ளது.அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா கார் விற்பனையில் உலக அளவில் 4வது இடத்தை எட்டிபிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று,இரு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் விற்பனையும் கணிசமான வளர்ச்சி கண்டுள்ளது. இதனால்,இந்தியாவில் வாகன விற்பனையை துவங்குவதற்கு பல சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்ஸ்,ஜெர்மனி,ஜப்பான்,தென்கொரியா நாடுகளை சேர்ந்த பல நிறுவனங்கள் இந்திய வாகன சந்தையி்ல குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளன.இந்த வரிசையில் சேர்வதற்கு,சீனாவை சேர்ந்த நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.

சீனாவை சேர்ந்த ஷாங்காய் ஆட்டோ இன்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவில் நுழைந்துவிட்ட நிலையில், ஜியாங்குவாய் ஆட்டோமொபைல் நிறுவனம்,பிரில்லியன்ஸ் ஆட்டோ,செர்ரி இன்டர்நேஷனல்,பில்டு யுவர் ட்ரீம்ஸ் மற்றும் பெய்கி போட்டான் ஆகிய முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்குவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

சீனாவின் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான பெய்கி போட்டான் விரைவில் இந்தியாவில் தொழிற்சாலை துவங்க முடிவு செய்துள்ளது.இதேபோன்று பிரில்லியன்ஸ் நிறுவனமும் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கவும்,சரக்கு வாகனங்கள் விற்பனையை துவங்கவும் தீவிரம் காட்டி வருகிறது.

சீனாவை சேர்ந்த பல முன்னணி வாகன தயாரிப்பாளர்கள் இந்தியாவில் காலூன்றுவதற்கு தயாராக உள்ளதால் இந்திய வாகன சந்தையில் கடும் போட்டி ஏற்படும் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 19, 2011, 17:04 [IST]
English summary
With India slated to become the fourth largest automobile market in the world over the next five years, a host of Chinese automobile manufacturers such as Jianghuai Automobile Company (JAC), Brilliance Auto,Chery International, Build Your Dreams (BYD) and Beiqi Foton are all exploring opportunities to set up shop in the country.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+