கார்களின் விலையை 2 சதவீதம் உயர்த்தும் ஃபியட்

ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலியால், கார் நிறுவனங்களுக்கு இறக்குமதி செலவீனம் அதிகரித்துள்ளது.
இதனால், ஏனைய வெளிநாட்டு நிறுவனங்கள் கார்களின் விலையை வரும் ஜனவரி முதல் உயர்த்துவதாக அறிவித்துவிட்டன.
இந்த வரிசையில், கடைசியாக இணைந்துகொண்டுள்ளது பியட். வரும் ஜனவரி 1ந் தேதி முதல் புன்ட்டோ மற்றும் லீனியா கார்களின் விலையை 2 சதவீதம் உயர்த்துவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கார்களின் விலையை உயர்த்த மாருதியும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








