முகப்பில் பல புதிய மாற்றங்களுடன் வரும் செவர்லே கேப்டிவா

செவர்லே பிராண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை செய்து வரும் கேப்டிவா பிரிமியம் எஸ்யூவிக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. அசத்தலான வடிவமைப்பு கொண்ட கேப்டிவாவின் விற்பனையை மேலும் அதிகரிக்க செய்யும் முயற்சிகளை ஜெனரல் மோட்டார்ஸ் மேற்கொண்டுள்ளது.
இதனால், புதுப்பொலிவுடன் கேப்டிவாவை அறிமுகம் செய்யும் முயற்சிகளை ஜெனரல் மோட்டார்ஸ் மேற்கொண்டுள்ளது. இதற்காக, கேப்டிவாவின் முகப்பு பகுதியின் வடிவமைப்பில் பல புதிய மாற்றங்களை ஜெனரல் மோட்டார்ஸ் செய்து வருகிறது.
மிட்சுபிஷி அவுட்லேண்டர் கார் போன்ற முகப்பில் எடுப்பான தோற்றத்தை கொடுக்கும் முன்பக்க கிரில், மறுவடிவமைப்புடன் கூடிய ஹெட்லேம்ப் உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக ஜெனரல் மோட்டார்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிப்புற வடிவமைப்பு தவிர, கேப்டிவாவின் கேபினும் பல புதிய மாற்றங்களுடன் வர இருக்கிறது. எஞ்சின் சப்தம் காருக்குள் கேட்காதவாறு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேபினுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது புதிய கேப்டிவா.
மேலும், 184 ஆற்றலை அள்ளி இறைக்கும் ஆற்றல் கொண்ட புதிய 2.2 லிட்டர் எஞ்சினையும் புதிய கேப்டிவாவில் பொருத்தி அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜனவரியில் இந்த புதிய கேப்டிவா எஸ்யூவி இந்தியா வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








