உலக அளவில் ஆன்லைனில் அதிகம் தேடப்பட்ட கார் ஹோண்டா சிவிக்

உலக அளவில் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதில் கெல்லி புளூ புக் இதழ் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், உலக அளவில் ஆன்லைனில் அதிகம் தேடப்பட்ட கார்கள் மற்றும் கார் நிறுவனங்கள் குறித்த விபரங்கள் இந்த இதழ் வெளியிட்டுள்ளது.
இதில், உலக அளவில் ஹோண்டா சிவிக் கார் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, ஹோண்டா நிறுவனத்தின் மற்றொரு பிரிமியம் செடான் காரான அக்கார்டு இரண்டாம இடத்தை பிடித்துள்ளது.
டொயோட்டோ கேம்ரி மூன்றாம் இடத்தையும், ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி நான்காம் இடத்தையும், ஃபோர்டு எப்-150 ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.
இதேபோன்று, அதிகம் தேடப்பட்ட நிறுவனங்கள் வரிசையில் டொயோட்டோ முதலிடத்தை பெற்றுள்ளது.
ஃபோர்டு இரண்டாம் இடத்தையும், ஹோண்டா மூன்றாம் இடத்தையும், செவர்லே நான்காம் இடத்தையும், ஹூண்டாய் மோட்டார்ஸ் 5ம் இடத்தையும் பெற்றுள்ளன.
ஆனால், இதில் ஒரு சொகுசு கார் நிறுவனம் கூட இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








