புத்தம் புது மாருதி ஸ்விப்ட்- சிறப்பம்சங்கள் ஓர் பார்வை

Maruti New Swift
50,000 என்ற இமாலய புக்கிங் எண்ணிக்கையுடன் இந்திய சந்தையில் புதிய ஸ்விப்ட் விற்பனைக்கு வருகிறது. தோற்றத்தில் பழைய ஸ்விப்ட் போலத்தானே இருக்கிறது. அப்புறம் என்ன புதிய ஸ்விப்ட்டுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம், அமர்க்களம் என்ற கேட்க தூண்டுவது இயல்பு.

ஆம். புதிய ஸ்விப்ட் பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது. அதிக மைலேஜ், புதிய பொலிவு, கூடுதல் சொகுசு என பல்வேறு அம்சங்களின் கலவையாக புதிய ஸ்விப்ட் புதிய பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்விப்ட்டின் சிறப்பம்சங்கள் பற்றிய ஸ்பீடு ரிவீவ்.

புதிய ஸ்விப்ட் அளவுகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள்:

பழைய ஸ்விப்ட்டைவிட புதிய ஸ்விப்ட்டின் நீளம் 90மிமீ கூடுதலாகியிருக்கிறது.

பின் இருக்கை வசதியை அதிகரிக்க 40மிமீ கூடுதல் நீளம் கொண்ட வீல்பேஸ்

அதிக மைலேஜ் தருவதற்காக பழைய ஸ்விப்ட்டைவிட எடையில் 30 கிலோ குறைந்துள்ளது.

பின் இருக்கையில் கால்களை வசதியாக நீட்டிமடக்க 28மிமீ கூடுதல் நீளம் கொண்ட பூட் ரூம்

உள்பக்கத்தில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்:

3 ஸ்போக்ஸ் மற்றும் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகளுடன் ஸ்லிம் ஸ்டீயரிங் வீல்

ஸ்போர்ட் பிளாக் வண்ணத்தில் வேயப்பட்ட பாகங்கள்

அதிக பருமனானவர்கள் வசதியாக உட்கார அகலமான முன் இருக்கைகள்

அருவி கொட்டுவது போன்ற தோற்றத்துடன் V-வடிவ சென்ட்ரல் கன்சோல்

தட்பவெப்பம், டிரிப் மீட்டர், எரிபொருள் சிக்கனத்தை காட்டும் எல்சிடி டிஸ்பிளே

ஸ்டோரேஜ் பாக்ஸ் இணைப்புடன் வெகு அழகான டேஷ்போர்டு

உயரிய சிறப்பம்சங்கள்:

டிரைவிங் பொஷிசனுக்கு தக்கவாறு மாற்றும் வசதி கொண்ட டில்ட் ஸ்டீயரிங்

கீலெஸ் என்ட்ரி சிஸ்டம்

புதிய வடிவத்துடன் ஸ்பீடோமீட்டர்

சாலையில் தடம் மாறுவதை எச்சரிக்கும் ஒன் டச் இண்டிகேட்டர்

வெளியில் உள்ள தட்பவெப்பத்திற்கு ஏதுவாக தாமாகவே கேபினுக்குள் ஏசியை மாற்றும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்

காரின் வேகத்திற்கு தக்கவாறு வால்யூம் கன்ட்ரோல் கொண்ட ஸ்டீரியோ சிஸ்டம்

புறத்தோற்றத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள்:

இண்டிகேட்டருடன் கூடிய ரியர் வியூவ் மிரர்கள்

கண் புருவத்தை இழுத்துவிட்டது போன்ற நீண்ட முகப்பு விளக்குகளின் வடிவம்

பக்காவட்டில் வந்து ஏறும் பின்பக்க டேஞ்சர் விளக்குகள்

ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் வீல் ஆர்க் வடிவம்

15இஞ்ச் அலாய் வீல்கள்

எஞ்சின்: கே-சீரிஸ்

பெட்ரோல் மாடல்:1197சிசி எஞ்சின்

டீசல் மாடல் :1248சிசி எஞ்சின்

அதிகபட்ச வேகம்: மணிக்கு 155கிமீ

மைலேஜ்: நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 18கிமீ, நகர்புறசாலைகளில் லிட்டருக்கு 12கிமீ

சஸ்பென்ஷன்: மெக்பெர்ஷன் ஸ்டர்ட் டார்ஸன் பீம் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன்

குறைந்தபட்ச திருப்பும் அளவு: 4.8மீட்டர் ரேடியஸ்

பிரேக்குகள்: முன்பக்கம் டிஸ்க் பிரேக், பின்பக்கம் டிரம் பிரேக்

இதுபோன்று,மொத்தத்தில் பழைய ஸ்விப்ட்டைவிட புதிய ஸ்விப்ட்டில் 140 மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, August 19, 2011, 12:36 [IST]
English summary
Maruti Suzuki is always working hard to maintain its long time number one car maker position in India. In this effort, Maruti keeps coming up with new cars across all segments in a couple of years from the previous release. This time, the new car will be the new Avatar of already popular car Maruti Suzuki Swift. The Swift will get even better in terms of dimensions, interiors and exteriors. The signature style and shape will remain fundamentally similar, but the new Swift is longer, wider and slightly lesser in height for more ride stability.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+