இந்தோனேஷியாவில் நானோ காருக்கு முதலீடை தவிர்க்க டாடா திட்டம்

இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நானோ காரை அறிமுகம் செய்ய டாடா திட்டமிட்டுள்ளது.
இதற்காக, இந்தோனேஷியா அல்லது தாய்லாந்தில் புதிய அசெம்பிளிங் ஆலை ஒன்றை அமைக்க டாடா மோட்டார்ஸ் பரிசீலனை செய்து வந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் நானோ காருக்கு அதிக முதலீடு செய்து சூடுபட்டதால், இனி நானோ காரை நம்பி பெரிய முதலீடுகளை தவிர்க்க டாடா முடிவு செய்துள்ளது.
இதற்காக, இந்தோனேஷியாவில் நானோ காரை அறிமுகம் செய்ய, அந்த நாட்டை சேர்ந்த உள்ளூர் ஆட்டோ உற்பத்தி நிறுவனத்தின் ஒத்துழைப்பை பெற டாடா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தியாவில் நானோ காருக்கு அதிக அளவில் டாடா மோட்டார்ஸ் முதலீடு செய்தது. ஆனால், நானோவின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாததால், நானோ கார் உற்பத்தியை பாதியாக குறைத்ததுடன் வேறு கார்களை நானோ கார் ஆலையில் உற்பத்தி செய்யவும் டாடா முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications