பிரேசிலில் எட்டியோஸ் கார் உற்பத்தி: டொயோட்டோ திட்டம்

Toyota Etios
டெல்லி: இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்றுள்ள எட்டியோஸ் காரை பிரேசில் நாட்டிலும் உற்பத்தி செய்ய டொயோட்டோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்கு கட்டப்பட்டு வரும் புதிய ஆலையில் அடுத்த ஆண்டு இறுதியில் எட்டியோஸ் காரின் உற்பத்தியை துவங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ நிறுவனம், இந்திய சந்தைக்கென எட்டியோஸ் செடான் காரை வடிவமைத்தது. டொயோட்டோ நிறுவனத்தின் 4,000 எஞ்சினியர்களின் 5 ஆண்டுகால அயராத உழைப்பில் இந்த கார் உருவானது.

கடந்த டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் எட்டியோஸ் செடான் காரை டொயோட்டோ அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்த நாள்முதல் எட்டியோசுக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு கூடிக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில், இந்திய சந்தையில் பெற்ற வெற்றியை தொடர்ந்து பிரேசில் நாட்டிலும் எட்டியோஸ் காரை உற்பத்தி செய்ய டொயோட்டோ திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் கமிஷனில் டொயோடோட்டோ தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"பிரேசிலுள்ள சொரகாபா என்ற இடத்தில் புதிய கார் உற்பத்தி ஆலை கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் இந்த ஆலை உற்பத்தியை துவங்கும்.

ஆண்டுக்கு 70,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக கட்டப்பட்டு வரும் இந்த ஆலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட எட்டியோஸ் காரை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது," என்று அந்த அறிக்கையில் டொயோட்டோ கூறியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 19, 2011, 11:12 [IST]
English summary
The Toyota Etios which was recently launched in India is all set to make a pan Atlantic journey to Brazil. Toyota,the Japanese carmaker is making plans to build the Etios sedan in the South American country by the end of 2012. In a filing to the US Securities Exchange Commission , Toyota Motor Corporation said: "In August 2010, Toyota decided to construct a vehicle plant in Sorocaba, Brazil. This plant is expected to produce the Etios small vehicle introduced in India with an annual production capacity of 70,000 units. The plant is expected to commence production in late 2012."
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+