ஜனவரியில் 10,000 கார்களுக்கு மேல் விற்று ஃபோர்டு இந்தியா சாதனை

ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும்,இதுவரை இல்லாத அளவாக ஒரே மாதத்தில் 10,000 கார்களுக்கு மேல் விற்பனை என்ற சாதனை இலக்கை ஃபோர்டு இந்தியா அடைந்துள்ளது.
இதுகுறித்து ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் மைக்கேல் போனிஹம் கூறியதாவது:
ஜனவரி மாதத்தில் 10,026 கார்களை விற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம்.இதில், 8,600பிகோ கார்களும் அடங்கும்.கடந்த ஆண்டு ஜனவரி மாத கார் விற்பனையை (2,453 கார்கள்) ஒப்பிடும்போது,இது நான்கு மடங்கு அதிகம். இது எல்லையில்லா மகிழ்ச்சியை தருகிறது.
கடந்த ஆண்டு ஃபோர்டு இந்தியாவுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிகோ கார் எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பை பெற்றது. 20க்கும் மேற்பட்ட ஆட்டோமொபைல் துறை விருதுகளை பெற்று, இதுவரை எந்த காருக்கும் கிடைக்காத பெருமையை பிகோ பெற்றது.
மேலும்,கடந்த ஆண்டு மொத்தம் 83,887கார்கள் விற்பனையானது. இதில்,68,000 பிகோ கார்களும் அடங்கும். இதன் மூலம்,நிறுவனத்தின் கார் விற்பனை 184 சதவீதம் உயர்வை கண்டது.
இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சேவை வழங்கும் விதத்தில் டீலர்களையும்,சர்வீஸ் சென்டர்களையும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்"என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








