அட்ராசக்கை... ஒரே வாரத்தில் 100 ஐ கடந்த வால்வோ S60 புக்கி்ங்

சொகுசு பஸ் மற்றும் கார் தயாரிப்பில் வால்வோ நிறுவனம் உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனமாக திகழ்கிறது. இந்தியாவின் சொகுசு பஸ் சந்தையில் முன்னிலை வகிக்கும் வால்வோ, சொகுசு கார் சந்தையில் பின்தங்கி உள்ளது.
இந்நிலையில், வேகமாக முன்னேறி வரும் இந்திய சொகுசு கார் சந்தையில், முக்கிய இடத்தை பிடிக்க புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதே ஒன்றே சரியான வழி என்று முடிவுக்கு வந்தது வால்வோ.முதலாவதாக, ரூ.30 லட்சம் விலையில் S60 என்ற பிரிமியம் செடான் சொகுசு காரை சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது.
பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட S60, இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வாரமே ஆன நிலையில் 100 க்கும் மேற்பட்ட S60 கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதால் வால்வோ நிறுவனம் மகிழ்ச்சியடைந்துள்ளது.
S60 காருக்கு கிடைத்துள்ள வரவேற்பால் நெகிழ்ந்து போயுள்ள வால்வோ, அடுத்தடுத்து புதிய மாடல்களை இந்தியாவில் களமிறக்கவும் முடிவு செய்துள்ளது. மேலும், டீலர்கள் எண்ணி்க்கையை அதிகரிக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








