இந்தியாவில் 20 புக்கிங்கை அள்ளிய ரூ.1.1 கோடி பென்ஸ் ஜீப்

Mercedes Benz G55 AMG
நம்மூர் ஃபோர்ஸ் ட்ராக்ஸ் ஜீ்ப் மாதிரியேதான் இருக்கு இந்த பென்ஸ் ஜீப். ஆனால், விலையை கேட்டவுடன் மயக்கமே வந்துவிடுகிறது. ஆம், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி55 ஏஎம்ஜி என்ற திருநாமம் கொண்ட எஸ்யூவி மாடலான இதன் விலை ரூ.1.1 கோடி.

சரி, அப்படி என்னதான் இருக்கு இந்த ஜீப்புக்குள் எட்டி பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை குறிப்பிடும்படியாக(உருப்படியாக) ஒன்றுமே தெரியவில்லை.

கியர் லிவர் கூட கடந்த 1970களில் ஜெர்மனி ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட ஜீப்புகளில் உள்ளதுபோன்றே பழமையான வடிவமைப்பை கொண்டுள்ளது. சொகுசு, பாதுகாப்பு என நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏராளமாக இருக்கும் என்று பார்த்தால் அதிலும் ஏமாற்றம்தான்.

ஆனால், இதன் எஞ்சின் மட்டும் சூப்பர் என்று கூறலாம். இந்த ஜீப்பில் பொருத்தப்பட்டுள்ள வி-8 எஞ்சின் 503 பிஎச்பி ஆற்றலை அள்ளி இறைக்கும் திறன் கொண்டது. மேலும், இது ஆப்ரோடு சாகசங்களில் அனாயசமாக செல்லும் வகையில் பாடி பில்டிங் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 35 ஆண்டுகளாக மார்க்கெட்டில் தாக்குப்பிடித்து அதே வடிவமைப்புடன் வரும் இந்த ஜீப்புக்கு இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனமே எதிர்பார்க்காத வரவேற்பு. இதுவரை 20 ஜி-கிளாஸ் ஜீப்புகள் இந்தியாவில் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக பென்ஸ் காலரை தூக்கிவிட்டுக்கொள்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, October 24, 2011, 13:06 [IST]
English summary
The Mercedes-Benz G-Class SUV is a car that has struck to its roots since 35 years. It carries the same boxy design that was first seen in the 70s. The latest G-Class, the G55 AMG reminds us of three Indian vehicles, the Tata Sumo, the Force Trax and the Mahindra Armada. All these Indian vehicle are considered rural vehicles that are known for their ruggedness.The Mercedes G-Class though still rugged is a more expensive piece of metal. The G55 AMG is priced at a whopping Rs.1.1 crore. The price tag does not mean, the G55 AMG has all the gadgets and comfort features that you will usually expect with cars with such a price tag. The Merc remains the old school SUV with switches and knobs that reminds us of German army jeeps built in the 70s.Yet, it has attracted 20 bookings from wealthy Indian buyers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+