மினிடிரக்கை அறிமுகப்படுத்த ஆயத்தமாகும் ஜெனரல் மோட்டார்ஸ்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் சந்தைகளில் முக்கிய இடம்பிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் செவரோலேட் பிராண்டில் கார்களை விற்பனை செய்து வரும் இந்த நிறுவனம், விரைவில் மினிடிரக் உற்பத்தியிலும் ஈடுபட முடிவு செய்துள்ளது. இதற்காக, தனது ஆட்டோமொபைல் சகாக்களின் ஒத்துழைப்பை பெறவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் சர்வதேச விவகாரங்களுக்கான தலைவர் டிம் லீ கூறியதாவது:
"கார் சந்தையின் வளர்ச்சியை போன்றே, மினிடிரக் சந்தையும் இந்தியாவில் வளர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மினிடிரக்கை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
கூட்டு ஒப்பந்த அடிப்படையில் சக ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் இணைந்து மினிடிரக்கை அறிமுகம் செய்ய உள்ளோம். கார் சந்தை போன்று, மினிடிரக் சந்தையிலும் முக்கிய இடத்தை பிடிப்போம்," என்றார்.


Click it and Unblock the Notifications








