தொழில்நுட்ப கோளாறு: கார்களை திரும்பபெறும் ஹூண்டாய்,ஹோண்டா நிறுவனங்கள்

Recall
டெட்ராய்ட்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட குறிப்பிட்ட மாடல் கார்களை திரும்ப பெறுவதாக ஹூண்டாய் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்தின் இணையதளத்தில் ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"எலண்ட்ரா மாடல் கார்களில் ஏர்பேக் கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏர்பேக் சென்சார்களில் உள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேவையில்லாத சமயங்களில் ஏர்பேக் வெளியில் வந்து விடுகிறது.

பிரச்சினையை சரிசெய்து தரும் விதத்தில், கடந்த 2006 ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2007 ம் ஆண்டு ஆகஸ்டு வரை தயாரிக்கப்பட்ட எலண்ட்ரா கார்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம். தவிர, பியர்ட்டோ ரிகோ கார்களையும் திரும்ப பெற முடிவு செய்துள்ளோம்.

மொத்தமாக 1.90 லட்சம் கார்கள் திரும்ப பெற இருக்கிறோம். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு விரைவில் தகவல் அனுப்பப்படும்," என்று தெரிவித்துள்ளது.

இதேபோன்று ஹோண்டா நிறுவனமும் திரும்பபெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு ஆணைய இணையதளத்தில் ஹோண்டா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

"அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட 2011ம் ஆண்டு மாடல் சிவிக் கார்கள் விபத்தில் சிக்கினால் எரிபொருள் குழாய் எளிதில் உடைந்து தீப்பற்றும் அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, 2011ம் ஆண்டு மாடல் சிவிக் கார்களில் பொருத்தப்பட்டுள்ள எரிபொருள் குழாயை மாற்றி தர ஹோண்டா முடிவு செய்துள்ளோம்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் விற்பனை செய்யப்பட்ட பிரச்சினைக்குரிய 21,700 சிவிக் கார்களை திரும்பெற உள்ளோம். இதில், அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட 18,000 கார்களும், கனடாவில் விற்பனை செய்யப்பட்ட 3,600 கார்களும் அடங்கும்.

இதுவரை பிரச்சினைகள் எழுந்ததாக புகார்கள் எதுவும் வரவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக சிவிக் கார்களை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, உரிமையாளர்களுக்கு வரும் ஏப்ரல் மாத மத்தியில் இ-மெயில் மூலம் தகவல் அனுப்பப்படும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, March 20, 2011, 12:35 [IST]
English summary
Hyundai Corp and honda motors are made recall announcement in US and canada. The two auto giants recalled more than 2.12 lakh cars due to technical problems.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+