ரூ.3 கோடி ஃபெராரி காரை வாங்கும் பாலிவுட் நடிகர் இம்ரான் கான்

ஏற்கனவே, இம்ரானிடம் பிஎம்டபிள்யூ கார், போர்ஷே எஸ்யூவி மற்றும் அவரது மனைவி பரிசளித்த வோக்வேகன் பீட்டில் ஆகியவை இருக்கின்றன.
இந்த நிலையில், அவர் தனது நீண்ட நாள் கனவான ஃபெராரி கார் வாங்கும் திட்டத்துக்கு தற்போதை நிறைவேற்றியுள்ளார்.
ஆம், ரூ.3 கோடி மதிப்புடையை ஃபெராரி ஸ்போர்ட்ஸ் காரை அவர் புக்கிங் செய்துள்ளார். இதை அவரது உதவியாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால், இதுகுறித்த மேற்கொண்டு தகவல்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.
கார் புக்கிங் செய்யப்பட்டுவிட்டாலும் அடுத்த ஆண்டுதான் டெலிவிரி கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த ஆண்டு துவக்கத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர்," நான் சினிமாவில் நடிப்பதே ஃபெராரி கார் ஒன்றை சொந்தமாக்கிக்கொள்ளதான்," என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








