ஜப்பான் கார் தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகள் ஸ்தம்பிப்பு

Honda
டோக்கியோ: ஆட்டோமொபைல் துறையின் உற்பத்தி கேந்திரமாக திகழும் ஜப்பானில், சமீபத்தில் நிகழ்ந்த இயற்கை சீற்றங்களால் கார் தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கார் உற்பத்தி மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானை சேர்ந்த மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களான ஹோண்டா, டொயோட்டோ, நிசான் மற்றும் சுஸுகி தொழிற்சாலைகளில் உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளது. தொழிலாளர் பற்றாக்குறை, உதிரிபாகங்கள் மற்றும் மின்சார தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் தொழிற்சாலைகளில் கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழிற்சாலையில் கார் உற்பத்தி பணிகளை மீண்டும் துவங்குவதை ஹோண்டா நிறுவனம் வரும் மேமாதம் வரை ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, அமெரிக்காவிலுள்ள டீலர்கள் அனைவருக்கும் ஹோண்டா நிறுவனம் தகவல் அனுப்பியுள்ளதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பிரபல நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

டீலர்களில் உள்ள கார்கள் எண்ணிக்கை குறித்து தகவல் அனுப்புமாறும் டீலர்களை கேட்டுக்கொண்டுள்ள ஹோண்டா டெலிவிரி கொடுக்க வேண்டிய கார்கள் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்து வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும, வாடிக்கையாளர்களிடமிருந்து கார்களுக்கான முன்பதிவை ஹோண்டா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இதேபோன்று, டொயோட்டோ, நிசான் மற்றும் சுஸுகி போன்ற நிறுவனங்களும், கார் உற்பத்தி பணிகளை வரும் மேமாத்தில் முழு அளவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Sunday, March 20, 2011, 11:59 [IST]
English summary
The recent natural disasters has made Japan car manufacturers to put off the resumption of production till May. The Honda motors has been conveyed this news to the US dealers. Other players like Toyota, Suzuki and Nissan too have made up their mind to wait till normalcy is revived. Only then full production could be made, they feel.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+