டெல்லி கண்காட்சியில் வெரிட்டோ எலக்ட்ரிக் கார்: பார்வைக்கு வைக்கும் மஹிந்திரா

Verito Front
தனது பிரபல செடான் காரான வெரிட்டோவின் எலக்ட்ரிக் காரை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் மஹிந்திரா பார்வைக்கு வைக்க உள்ளது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய சர்வதேச ஆட்டோ கண்காட்சியாக கருதப்படும் டெல்லி ஆட்டோ கண்காட்சி வரும் ஜனவரி முதல் வாரத்தில் துவங்க இருக்கிறது.

இதில், அனைத்து முன்னணி வாகன நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன. மேலும், ஆட்டோ கண்காட்சிக்கான பணிகளில் அவை மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா தனது தொழில்நுட்ப வலிமையை சர்வதேச அளவில் எடுத்துரைக்கும் விதமாக டெல்லி கண்காட்சியை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் எலக்ட்ரிக் கார்களுக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து, தனது பிரபல செடான் காரான வெரிட்டோவின் கான்செப்ட் எலக்ட்ரிக் கார் மாடலையும் பார்வைக்கு வைக்கவும் மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

புதிய வெரிட்டோ எலக்ட்ரிக் கார் மூலம் எதிர்காலத்தில் விற்பனையில் முக்கிய இடத்தை பிடிக்க முடியும் என்று மஹிந்திரா ஆணித்தரமாக நம்புகிறது.

இதுதவிர, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்யூவி 500 எஸ்யூவி, ஸ்கார்ப்பியோ, தார் ஜீப் உள்ளிட்ட கார் மாடல்களையும், தனது துணை நிறுவனமான சாங்யாங் மோட்டார்ஸ் தயாரிப்பு எஸ்யூவிக்களையும் மஹிந்திரா பார்வைக்கு வைக்க உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 20, 2011, 11:09 [IST]
English summary
Mahindra will display for the first time the electric version of Verito sedan car upcoming Delhi Auto Expo. The company will also display the Ssangyong Suv models in that Expo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+