கடந்த நிதியாண்டில் 25 லட்சத்தை தொட்ட கார் விற்பனை

கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஆட்டோமொபைல் துறை யாரும் எதிர்பாராத வளர்ச்சியை பெற்று வருகிறது. இதன் உச்சத்தை எட்டும் வகையில், கடந்த ஆண்டு வி்ற்பனையில் பல புதிய மைல்கற்களை கடந்து சாதனை படைத்தது.
இந்நிலையில், கடந்த நிதியாண்டில் கார் விற்பனை 30 சதவீத வளர்ச்சியை பெற்று, முதன்முறையாக 25 லட்சம் என்ற புதிய இலக்கை தொட்டுள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சியாம் கூட்டமைப்பு தலைவர் கூறியதாவது:
"கடந்த நிதியாண்டில் வாகன விற்பனை பொதுவாக நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக, கார் விற்பனை 30 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் கார் விற்பனை முதன்முறையாக 25 லட்சம் என்ற புதிய இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளது.
ஆனால், ஸ்டீல், ரப்பர், காப்பர் மற்றும் தாமிரம் போன்ற முக்கிய மூலப்பொருட்களின் விலை உயர்வால், இந்த ஆண்டு கார் விற்பனை குறைய்ககூடும். இந்த ஆண்டில் கார் விற்பனை 12 முதல் 15 சதவீத வளர்ச்சியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், எளிய கடனுதவி, தனிநபர் வருமானம் உயர்வு ஆகியவற்றால், கார் விற்பனையில் தொடர்ந்து முன்னேற்றம் இருக்கும். இதேபோன்று, இந்த ஆண்டு மொத்த வாகன விற்பனை 2 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 64 புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ஆண்டும் 60 புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








