வரும் 14ந் தேதி புதிய சிட்டி அறிமுகம்: ஹோண்டா அறிவிப்பு

New Honda City
வரும் 14ந் தேதி காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய சிட்டி செடான் காரை அறிமுகப்படுத்துவதாக ஹோண்டா அறிவித்துள்ளது.

இந்திய மிட் சைஸ் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி கார்தான் விற்பனையில் நம்பர்ஒன் இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில், புதிய மாடல்கள் வரவால் ஹோண்டா சிட்டிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதைக்கருத்தில்க்கொண்டு, காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் புதிய சிட்டி காரை ஹோண்டா வடிவமைத்தது. கடந்த செப்டம்பர் மாதமே புதிய சிட்டி தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

இருப்பினும், பல்வேறு காரணங்களால் இந்திய மார்க்கெட்டில் சிட்டி செடான் காரின் அறிமுகத்தை பல முறை ஹோண்டா தள்ளிப்போட்டு வந்தது.

மேலும், தாய்லாந்தில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஹோண்டாவின் உதிரிபாகங்கள் சப்ளை அடியோடு தடைபட்டுள்ளது. இதனால், பிரியோ உள்ளிட்ட கார்களின் உற்பத்தியை ஹோண்டா நிறுத்தியுள்ளது.

இதனால், புதிய சிட்டி காரின் அறிமுகமும் மேலும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததற்கு முன்னதாக, ஒருவழியாக வரும் 14ந் தேதி புதிய சிட்டி காரை அறிமுகம் செய்யப் போவதாக ஹோண்டா அறிவித்துள்ளது.

புதிய ஹோண்டா சிட்டியில் வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்புகளில் மட்டும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆனால், முந்தைய மாடலில் இருந்த அதே 1.5 லிட்டர் ஐ விடெக் எஞ்சினுடன் புதிய ஹோண்டா சிட்டியும் வர இருக்கிறது.

புதுப்பொலிவுடன் வரும் ஹோண்டா சிட்டிக்காக ஏராளமான வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், சிட்டி அறிமுகப்படுத்துவதாக ஹோண்டா அறிவித்துள்ளது அவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, December 9, 2011, 10:08 [IST]
English summary
The wait for the new 2012 Honda City is set to end much earlier than expected. Honda has announced that it will launched the face-lifted City sedan in India on December 14th. The launch was delayed a number of times due to the severe floods in Thailand. We were not expecting the City to come in so soon as the carmaker has reduced production drastically in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+