ஸ்கூட்டர் வாங்கினால் ரூ.1,500க்கு பெட்ரோல் இலவசம்: மஹிந்திரா சலுகை

அந்த வகையில், ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,500 மதிப்புடைய பெட்ரோலுக்கான வவுச்சர் வழங்குவதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.
லாங் டிரைவ் ஆஃபர் என்ற பெயரில் மஹிந்திரா அறிவித்துள்ள இந்த சலுகையை ரோடியோ மற்றும் டூரோ ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஸ்கூட்டர் விற்பனையை கணிசமாக அதிகரிக்கும் என்று மஹிந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், மஹிந்திரா ஸ்கூட்டர்களின் விளம்பர தூதரான பாலிவுட் நடிகை கரீனா கபூரின் பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதற்குமுன்பாக, மஹிந்திரா இந்த சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு கைனடிக் நிறுவனத்தை கையகப்படுத்தி இருசக்கர வாகன உற்பத்தியில் இறங்கியது. தற்போது ரோடியோ, டூரோ ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் அந்த நிறுவனம், விரைவில் 110சிசி ஸ்டாலியோ மோட்டார்சைக்கிளை மறு அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








