4 வீல் டிரைவுடன் கூடிய முதல் ஃபெராரி கார் அறிமுகம்

Ferrari
டெல்லி: 4 வீல் டிரைவுடன் கூடிய முதல் ஹேட்ச்பேக் காரை அறிமுகம் செய்துள்ளது ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் புகழ்பெற்ற ஃபெராரி நிறுவனம். தனது பழைய மாடல் கார்களின் சாதகமான அம்சங்களை மனதில் கொண்டு எப்எப் காரை வடிவமைத்துள்ளது ஃபெராரி.

புகழ்பெற்ற 458 இட்டாலியானா மாடலின் முன்பக்கத்தை ஒத்துள்ளது எப்எப் வடிவமைப்பு. ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்ததாக இருந்தாலும், ஃபெராரி கார்களுக்கே உரிய ஸ்போர்ட்டி லுக் எப்எப் காரில் அப்பட்டமாக தெரிகிறது.

பொதுவாக ஃபெராரி கார்களில் பொருட்கள் வைப்பதற்கான இடம் குறைவாக இருக்கும். ஆனால், இந்த குறையை எப்எப் காரில் போக்கியுள்ளது ஃபெராரி. பொருட்கள் வைப்பதற்கு அதிக இடவசதியை கொடுக்கும் வகையில், பின் இருக்கைக்கு கீழே டிக்கியை நீ்ட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹேட்ச்பேக் கார் என்றவுடன் வேகம் குறைந்த ஃபெராரி காராக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுவது சகஜம்தான். ஆனால், வி12 எஞ்சின் பொருத்தப்பட்ட எப்எப் பிக்கப்பில் ஃபெராரி கார்களுக்கே உரிய சீறும் குணத்தை காட்டி மிரட்டுகிறது.

வெறும் 3.7 வினாடிகளில் 0-100 கி.மீ., வேகத்தை எட்டிவிடுகிறது என்றால், இது கண்டிப்பாக ஃபெராரியின் வாரிசுதான் என்று யூகித்துக் கொள்ளமுடிகிறது. டியூவல் கிளட்ச், ஆட்டோமேட்டிக் கியர் ஆகிய அம்சங்களும் இதில் இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 21, 2011, 14:48 [IST]
English summary
The FF was made its official debut at the recently concluded Geneva Motor show. The frontal design of the car is similar to the 458 Italia. It is the Italian car maker's first four-wheel drive car as well as its first hatchback. The hatchback design provides added practicality. The FF is also unique due to the hug amount of luggage space it offers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+