இந்த ஆண்டு இறுதியில் ஐ45 அறிமுகம்-ஹூண்டாய் திட்டம்

ஹூண்டாயின் தனித்துவம் வாய்ந்த, புளுயிட் ஸ்கல்ப்சர் வடிவமைப்பில் முதலாவதாக வரும் இந்த கார், பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் என ஹூண்டாய் வட்டாரங்கள் பெருமிதம் தெரிவிக்கின்றன.
ஐ45 காரில் பொருத்தப்பட்டுள்ள 2.4 லிட்டர் எஞ்சின், 198 ஹார்ஸ்பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சொகுசு, பாதுகாப்பு என அனைத்து அம்சங்களிலும், ஐ45 தனி முத்திரை பதிக்கும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
மேலும், மாருதி கிசாஷி, வோக்ஸ்வேகன் பஸாத், ஹோண்டா அக்கார்டு, நிசான் டீனா, ஸ்கோடா சூப்பர்ப் ஆகிய கார்களுக்கு ஐ45 கடும் சந்தை போட்டியை கொடுக்கும் என ஹூண்டாய் அடித்து கூறுகிறது.
ரூ.19 லட்சம் முதல் ரூ.20 லட்சம் விலையில் ஐ45 பிரிமியம் செடான் காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








