ரூ.27 லட்சம் சம்பளத்தில் சென்னை ஐஐடி மாணவர்களை பணியமர்த்திய ஹூண்டாய்

Hyundai Logo
முதன்முறையாக தனது சர்வதேச அளவிலான பணியிடங்களுக்கு இந்தியர்களை பணியமர்த்தும் பணிகளை ஹூண்டாய் மோட்டார்ஸ் துவங்கியுள்ளது. முதல்கட்டமாக, ஆண்டுக்கு ரூ.27 லட்சம் சம்பளத்தில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தை சேர்ந்த 2 மாணவர்களுக்கு பணியமர்த்தியுள்ளது ஹூண்டாய்.

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் கார் நிறுவனம் இந்திய கார் உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கிறது. இந்தியாவில் வலுவாக காலூன்றியுள்ள ஹூண்டாய் தற்போது முதன்முறையாக சர்வதேச அளவிலான பணியிடங்களுக்கு இந்தியர்களை நியமிக்க துவங்கியுள்ளது.

ஐஐடி மற்றும் ஐஐஎம் உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களில் "ஹூண்டாய் புளூ வேவ்" என்ற பெயரில் காம்பஸ் இன்டர்வியூ நடத்தி பணியாளர்களை நியமிக்கும் பணிகளை அந்த நிறுவனம் துவங்கியுள்ளது.

முதல்கட்டமாக, சென்னையிலுள்ள ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் காம்பஸ் இன்டர்வியூ மூலம் 2 எஞ்சினியரிங் மாணவர்களை அந்த நிறுவனம் தேர்வு செய்து பணியமர்த்தியுள்ளது. ஆண்டுக்கு தலா ரூ.27 லட்சம் ஊதிய ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அடுத்ததாக, பெங்களூரிலுள்ள ஐஐடியில் பணியாளர்களை தேர்வு செய்யும் முகாமை ஹூண்டாய் விரைவில் நடத்தவுள்ளது. அங்கிருந்து ஒரு எஞ்சினியரை தனது சர்வதேச அளவிலான பணியில் நியமிக்கவுள்ளது. தவிர, பெங்களூரில் தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு ஆண்டுக்கு ரூ.39 லட்சம் வரை கொடுக்கும் திட்டமும் இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு சம்பளம் தவிர, வீட்டு வாடகைப்படி, ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ், தாய் நாட்டுக்கு வந்துபோவதற்கான செலவீனம் உள்ளிட்ட ஏராளமான இதர சலுகைகளும் வழங்கப்படும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹூண்டாய் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

"இது எங்களது கன்னி முயற்சி. மெட்ராஸ் ஐஐடியில் நடத்துப்பட்ட காம்பஸ் இன்டர்வியூ மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏராளமான திறமையானவர்கள் இங்கு உருவாக்கப்படுகின்றனர்.

சர்வதேச அளவில் புதிய ஆலைகள் மற்றும் வர்த்தக விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகளில் இந்தியர்களை நியமிக்கும் வகையில் இந்த காம்பஸ் இன்டர்வியூக்கள் நடத்தப்படும். மேலும், தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் மேற்படிப்பு படிக்க ஆர்வம் தெரிவிக்கின்றனர். அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களது மேற்படிப்புக்கும் ஸ்பான்ஸர் செய்ய உள்ளோம்.

அடுத்த ஆண்டு நாட்டின் பிற பகுதிகளில் உள்ள ஐஐடி மற்றும் ஐஐஎம் நிறுவனங்களில் காம்பஸ் இன்டர்வியூக்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம், இந்தியாவிலிருந்து அதிக அளவிலான பணியாளர்கள் ஹூண்டாய் குடும்பத்தில் இணைவர்," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 21, 2011, 16:43 [IST]
English summary
Korean auto major Hyundai Motor Company has embarked on a huge hiring project which is aimed to bolster its technical amd marketing divisions across the globe. Much of the hiring in India will focus on the reputed IITs and IIMs. It has already hired two students from IIT Madras under the Hyundai Blue Wave programme.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+