டெல்லி ஆட்டோ கண்காட்சியில் 2 சாங்யாங் எஸ்யூவி மாடல்கள்: மஹிந்திரா

Korando
எஸ்யூவி தயாரிப்பில் புகழ்பெற்ற சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2 எஸ்யூவி மாடல்களை டெல்லி கண்காட்சியில் பார்வைக்கு வைக்க உள்ளது மஹிந்திரா.

கடந்த மார்ச் மாதம் தென் கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தை மஹிந்திரா கையகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அதளபாதாளத்தில் இருந்த சாங்யாங் மோட்டார்ஸ் எஸ்யூவி விற்பனை நன்கு வளர்ச்சி கண்டு வருகிறது.

இந்த நிலையில், சாங்யாங் எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற எஸ்யூவி மாடல்களான கொரண்டூ மற்றும் ரெக்ஸ்டான் எஸ்யூவிக்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், வரும் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் இந்த 2 எஸ்யூவி மாடல்களையும் தனது அரங்கில் காட்சிக்கு வைக்க உள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

இதில், ரெக்ஸ்டான் எஸ்யூவி 5 சிலிண்டர் கொண்ட 2.7 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. இது 162 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இந்த எஸ்யூவி 5 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடலுடன் விற்பனைக்கு வர இருக்கிறது.

மற்றொரு மாடலான கொரண்டூ மோனோகொயக் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள மாடல், இதில், 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சினுடன், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடலுடன் வருகிறது.

இந்த இரண்டு எஸ்யூவி மாடல்களும் பார்வையாளர்களை வெகுவாக கவரும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 21, 2011, 16:39 [IST]
English summary
Mahindra will display the 2 Ssangyong motors Suv models in upcoming Delhi Auto Show. The First one korando is soft off road suv and other one is Fully offroad suv.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+