புதிதாக இரண்டு கனரக டிரக்குகள்:மஹிந்திராநேவிஸ்டார் அறிமுகம்

By
Mahindra navistar Truck
புனே: 25 டன் இழுவை திறன் கொண்ட டிப்பர் லாரியையும்,40 டன் இழுவை திறன் கொண்ட டிராக்டர் டிரெய்லரையும் மஹிந்திரா நேவிஸ்டார் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த நேவிஸ்டார் நிறுவனம்,இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து மஹிந்திரா நேவிஸ்டார் கூட்டு குழுமத்தின் பெயரில் கனரக டிரக்குகளை தயாரித்து வருகிறது.இந்தியாவில் கனரக வாகன விற்பனை வேகமாக வளர்ந்து வருவதால்,புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதில் மஹிந்திரா நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில்,இரண்டு புதிய கனரக டிரக்குகளை மஹிந்திரா நேவிஸ்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.25டன் இழுவை திறன் கொண்ட எம்என்25 என்ற டிப்பர் லாரியாகும்.மற்றொன்று 40டன் இழுவை திறன் கொண்ட எம்என்40 டிராக்டர் டிரெய்லராகும்.

இதுகுறித்து மஹிந்திரா நேவிஸ்டார் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கூறியதாவது

"இந்தியாவில் கனரக வாகன விற்பனை சந்தையின் வளர்ச்சியை கவனத்தில்கொண்டு புதிய டிரக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிப்பர் லாரி பாரத் ஸ்டேஜ் III மாசுக் கட்டுப்பாடு விதிகளின்படி தயாரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 50,000 கனரக டிரக்குகளை விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.ஆண்டுக்கு 10முதல்15சதவீத விற்பனை வளர்ச்சியை இலக்கை எட்ட திட்டமிட்டு செயல்பட்டுவருகிறோம்,"என்று கூறினார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எம்என்25டிப்பர் ரூ.23.26லட்சம் விலையிலும்,எம்என்40மாடல் டிராக்டர் டிரெய்லர் ரூ.19.3லட்சம் விலையிலும் கிடைக்கும் என்று மஹிந்திரா நேவிஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, February 21, 2011, 16:47 [IST]
English summary
Mahindra navistar Truck & Engine Corporation, on Thursday launched two new trucks — a 25-tonne tipper (MN25 Tipper) and 40-tonne tractor-trailer (MN40), to expand its portfolio in the fast-growing commercial vehicle market. The Bharat Stage III MN25 Tipper would cost Rs 23.26 lakh and the MN40 Rs 19.3 lakh respectively.The company expects to achieve annual sales of 50,000 units in the next 2-3 years.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+