கார் புதிய தொழில்நுட்பங்கள் ஒரு பார்வை (பகுதி-2)

Navigation System
நேவிகேஷன் சிஸ்டம்: ஓட்டுனருக்கு வழிகாட்டும் அதிநவீன தொழில்நுட்பம்தான் நேவிகேஷன் சிஸ்டம். செயற்கைகோள் உதவியுடன் கூடிய ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த கருவி மூலம், ஊர் பேர் தெரியாத இடத்தில் கூட, நாம் செல்லும் இடத்திற்கான வழியை துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

காரின் டேஷ்போர்டில் பொருத்தப்பட்டடிருக்கும் சிறிய திரையின் மூலமாகவோ அல்லது ஒலிபெருக்கி மூலமாகவோ நமக்கு செல்ல வேண்டிய பாதையை நேவிகேஷன் கருவி நமக்கு தெரிவிக்கும். மேலும், வழியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட பல தகவல்களையும் நேவிகேஷன் சிஸ்டம் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

கர்ட்டெயின் ஏர்பேக்ஸ்:

கார் விபத்துக்குள்ளானால், காரில் இருப்பவர்களை பாதுகாக்கும், உயிர்காக்கும் காற்றுப்பைகளே கர்ட்டெயின் ஏர்பேக்ஸ் என்று கூறப்படுகிறது. காரின் டேஷ்போர்டு, பின் இருக்கை மற்றும் கதவுகளில் ஏர்பேக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

ஒருவேளை, கார் விபத்தில் சிக்க நேர்ந்தால், கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் காற்றுப் பைகள் விரிந்து காருக்குள் இருப்பவர்களை பாதுகாக்கும். தலையில் காயம் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் காற்றுப் பைகள் பொருத்தப்படுகின்றன.

ரன் பிளாட் டயர்ஸ்:

பஞ்சரானாலும் ரன் பிளாட் டயர்கள் பொருத்தப்பட்ட கார்களை 50 கி.மீ., வேகத்தில் 50 முதல் 60 கி.மீ., தூரம் வரை தொடர்ந்து ஓட்டி செல்லலாம். வி.வி.ஐ.பி.,க்கள் பயன்படுத்தும் கார்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக ரன் பிளாட் டயர்கள் பொருத்தப்படுகின்றன.

(தொடரும்)..

கார் ஏ.பி.சி.டி., பகுதி-1

More from DriveSpark

Article Published On: Thursday, April 21, 2011, 15:02 [IST]
English summary
Automobile industry is growing rapidly with innovative technologies. Here we furnish the details of few car new technologies. It is very much useful for car buying aspirants.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+