டீசல் கார்கள் மீது முழு கவனம் செலுத்தும் ரினால்ட்

மேலும், அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த இருக்கும் புதிய கார்கள் டீசல் மாடலிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம் உலக அளவில் இந்தியா தனக்கு மிக முக்கிய மார்க்கெட்டாக அறிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் பெரிய அளவிலான விரிவாக்கப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. இதுவரை புளூயன்ஸ் மற்றும் கோலியோஸ் எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் ரினால்ட் முறைப்படி அறிமுகம் செய்துவிட்டது.
தவிர, நிசான் மைக்ராவின் ஜெராக்ஸ் காரான பல்ஸ் என்ற புதிய காரையும் சமீபத்தில் நடந்து முடிந்த பார்முலா ஒன் கார் பந்தயத்தில் பார்வைக்கு கொண்டு வந்தது.
டெல்லி ஆட்டோ கண்காட்சியில் இந்த புதிய ஹேட்ச்பேக் கார் முறைப்படி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் டீசல் கார்களுக்கான மார்க்கெட் வேகமாக வளர்ந்து வருவதால், டீசல் கார் மார்க்கெட் மீது முழு கவனத்தையும் செலுத்தப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரினால்ட் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் லென் குரன் கூறியதாவது:
"பல்ஸ் ஹேட்ச்பேக் மாடலை தவிர்த்து மேலும் 2 புதிய கார்களை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த இருக்கிறோம். அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் அனைத்து கார்களும் டீசல் மாடல்களிலும் விற்பனைக்கு வரும். எங்களது முழு கவனமும் டீசல் கார்களின் மீது செலுத்த இருக்கிறோம். நிச்சயம் டீசல் கார் மாடல்கள் வெற்றிபெறும் என்று நம்புகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








