ரூ.15.49 லட்சத்தில் உயர்ரக ஸ்கோடா லாரா அறிமுகம்

லாரா விஆர்எஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரிமியம் கார் மேல்தட்டு மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வந்துள்ளது.
இந்த காரில் 4 சிலிண்டர் கொண்ட 1.8 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 180 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் படைத்தது.
ஸ்போர்ட்டியான வடிவமைப்புடன் கூடிய முன்பக்க பம்பர், ரேஸ் கார் போன்ற தோற்றத்தை தரும் பின்பக்க லிப் ஸ்பாய்லர், பனி விளக்குகள், அழகான உள்பக்க அலங்காரங்கள், தரமான பாகங்கள் என அனைத்திலும் ஸ்கோடாவின் பிரிமியம் டச் தெரிகிறது.
இதன் அலாய் வீல்கள் ட்வின் ஸ்போக் கொண்டிருப்பதால் கார் செல்லும்போது ரதம் செல்வது போன்ற தோற்றத்தை தருகிறது. மேலும், அதிக கிரிப்பை கொடுக்கும் ஸ்டீல் பெடல்கள், ரப்பர் கிரிப்புகள் கூடுதல் பாதுகாப்புக்கு உத்தரவாதம்.
காருக்குள் அமர்ந்ததுமே ஒரு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கிறது புதிய லாரா விஆர்எஸ். மேலும், எலக்ட்ரானிக் ஆப்பரேட்டிங் முறையில் திறந்து மூடும் வசதிகொண்ட கண்ணாடி கூரை இதில் பொருத்தப்பட்டுள்ளது. 3 ஸ்போக்குளுடன் லெதர் உறையால் கவர் செய்யப்பட்ட ஸ்டீயரிங் வீல் கைகளுக்கு மிருதுவாகவும், அதிக கிரிப்பையும் வழங்கும்.
ஏர்பேக்குகள், ஏபிஎஸ்,இபிடி, ஆட்டோமேட்டிக் ட்ராக்ஸன் கன்ட்ரோல் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளும் இதை பிரிமியம் கார் என்பதை காட்டுகிறது. இவை தவிர, அதிக மைலேஜையும், குறைந்த கார்பன் புகையையும் வெளியிடும் எஞ்சினுடன் புதிய லாரா விஆர்எஸ் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








