ஸ்பெயினிலிருந்து டாடாவுக்கு பஸ் ஆர்டர்!

Tata Hybrid Bus
டெல்லி: 10 சிஎன்ஜி- எலக்ட்ரிக் ஹைபிரிட் பஸ்களை சப்ளை செய்ய ஸ்பெயின் நாட்டிலிருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ஆர்டர் கிடைத்துள்ளது.

டாடா தயாரித்து வரும் எரிவாயு (சிஎன்ஜி) மற்றும் பேட்டரியில் (எலக்ட்ரிக்) இயங்கும் இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட ஹைபிரிட் பஸ்களுக்கு நாளுக்கு நாள் கிராக்கி அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளின்போது, 4 சிஎன்ஜி-எலக்ட்ரிக் ஹைபிரிட் பஸ்களை டெல்லி போக்குவரத்து கழகத்திடம் டாடா முதன்முறையாக தயாரித்து வழங்கியது.

இந்த நிலையில், டெல்லியில் டாடா சிஎன்ஜி பஸ்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, மும்பை மாநகர போக்குவரத்து கழகத்திடமும் டாடா சோதனை முறையில் சில பஸ்களை சோதனை ஓட்டம் நடத்த சமீபத்தில் வழங்கியது.

இந்த நிலையில், உள்நாட்டு சந்தை மட்டுமின்றி, வெளிநாட்டிலிருந்தும் டாடா சிஎன்ஜி பஸ்களுக்கு ஆர்டர் வரத்துவங்கியுள்ளது.

மொத்தமாக 10 சிஎன்ஜி பஸ்களை தயாரித்து வழங்க ஸ்பெயினிலிருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ஆர்டர் பல்க் ஆர்டர் கிடைத்துள்ளது.

இதை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனப் பிரிவு தலைவர் ரவி பிஷரோடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Most Read Articles
English summary
A top official from Tata Motors said that the company is eliciting a favourable response for its CNG-electric hybrid buses and has got orders from overseas markets. From Spain, the Ratan Tata-led company has secured an order for 10 buses.
Story first published: Tuesday, June 21, 2011, 15:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X