விற்பனையில் சிட்டி, வென்ட்டோவை பின்னுக்கு தள்ளி வெர்னா 'நம்பர் ஒன்'

நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டு காலத்தில் (ஏப்ரல்-ஜூன்)ஹூண்டாய் நிறுவனம் 10,303 புதிய வெர்னா கார்களை விற்றுள்ளது. இதேகாலத்தில் வோக்ஸ்வேகன் நிறுவனம் 7,726 வென்ட்டோ கார்களை விற்பனை செய்துள்ளது.
நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த ஹோண்டா சிட்டி முதலிடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது.
இதுகுறித்து ஹூண்டாய் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு நிர்வாக இயக்குனர் அர்விந்த் சக்சேனா கூறியதாவது:
"உள்நாட்டு சந்தைக்கு மட்டுமே புதிய புளூயிடிக் வெர்னா உற்பத்தி செய்யப்படுகிறது. புதிய வெர்னாவுக்கு வாடிக்கையாளர்கள் கொடுத்த வரவேற்பு எங்களை நெகிழ வைத்துள்ளது.
இதுவரை 24,000 வெர்னா கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் வசதிகளை புரிந்துகொண்டு மேலும் புதிய மாடல்கள் மற்றும் எஞ்சின்களுடன் கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








