3.5 லட்சம் பேருக்கு சேப்டி டிரைவிங் பயிற்சி கொடுத்த மாருதி

Maruti Driving Training
டெல்லி: இதுவரை 3.5 லட்சம் பேருக்கு பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுவதற்கான பயிற்சியை வழங்கியுள்ளதாக மாருதி கார் நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாருதி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

"கார்களை விற்பதோடு நின்றுவிடாமல், பாதுகாப்பான டிரைவிங் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்வதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. கடந்த 2000ம் ஆண்டிலிருந்து பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவது குறித்த பிரச்சார இயக்கங்கள் நடத்தப்படுகிறது.

மேலும், கடந்த 2008ம் ஆண்டு, 5 லட்சம் பேருக்கு பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுவதற்கான செயல்முறை மற்றும் கற்றல் வழி பயிற்சி கொடுப்பதற்கான இயக்ககம் துவங்கப்பட்டது.இந்த இயக்ககத்தின் கீழ் இதுவரை 3.58 லட்சம் பேருக்கு டிரைவிங் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இதில், பயிற்சி எடுத்துக்கொண்ட 98,000 இளைஞர்கள் டிரைவிங்கை தொழிலாக கொண்டவர்கள். இது பெருமிதம் அளிப்பதாக உள்ளது. சாலை பாதுகாப்புகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்வதறகு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 22, 2011, 14:50 [IST]
English summary
Automobile major Maruti Suzuki Wednesday said it has trained 3.5 lakh people, including 98,000 underprivileged youth, in safe driving and road safety since 2008.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+