புதிய ஆலைக்கு ரூ.6,000 கோடி முதலீடு: மாருதி அறிவிப்பு

Maruti Swift
எதிர்கால தேவையை சமாளிக்கும் விதத்தில் கட்டப்பட இருக்கும் புதிய கார் தொழிற்சாலைக்காக ரூ.6,000 கோடி வரை முதலீடு செய்ய இருப்பதாக மாருதி தலைவர் ஆர்.சி.பர்கவா தெரிவித்தார்.

கார் நிறுவனங்களின் சரணாலயமாக குஜராத் மாறி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு, பிரான்சை சேர்ந்த பியூஜியட் சிட்ரோவன் ஆகிய நிறுவனங்கள் பெரும் முதலீட்டில் குஜராத்தில் கார் தொழிற்சாலை அமைக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தன.

இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக திகழும் மாருதி எதிர்கால தேவையை கருத்தில்க்கொண்டு புதிய கார் ஆலை அமைக்க முடிவு செய்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் மாருதி கார் ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிய ஆலையை குஜராத்தில் அமைக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்த புதிய ஆலை குஜராத்தில் அமைக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், புதிய கார் ஆலைக்காக ரூ.6,000 கோடி வரை முதலீடு செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பர்கவா தெரிவித்துள்ளார். மேற்கு குஜராத்தில் புதிய கார் ஆலை அமைப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்த அவர் இதுகுறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை," என்றும் தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 22, 2011, 16:45 [IST]
English summary
Maruti Suzuki, India's leading carmaker will be investing over $1.3 billion for its new car plant over the next few years. Reports say the Indian carmaker is preferring the western coastal state of gujarat for its plant but there are no confirmed announcements.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+