பிஎம்டபிள்யூ கார்களுக்கு வீல் சப்ளை ஆர்டர்: இந்திய நிறுவனத்துக்கு கிடைத்தது

வரும் 2013 மற்றும் 2014ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள பிஎம்டபிள்யூ கார்களுக்கான ஸ்டீல் வீல்களை இந்த நிறுவனம் சப்ளை செய்ய உள்ளது.
சர்வதேச நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியில் இந்த ஆர்டரை பிஎம்டபிள்யூ நிறுவனத்திடமிருந்து ஸ்டீல் ஸ்ட்ரைப்ஸ் வீல் நிறுவனம் பெற்றுள்ளது.
வரும் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஸ்டீல் வீல்கள் சப்ளை துவங்கும் என ஸ்டீல் ஸ்ட்ரைப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள ஆக்ஸ்போர்டு, லெய்ப்ஸிக் மற்றும் ரெஜன்பெர்க் ஆகிய இடங்களில் உள்ள பிஎம்டபிள்யூ கார் தொழிற்சாலைகளுக்கு ஸ்டீல் ஸ்ட்ரைப்ஸ் நிறுவனம் கார்களுக்கான ஸ்டீல் வீல்களை சப்ளை செய்யும்.
ஸ்டீல் வீல் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஸ்டீல் ஸ்ட்ரைப்ஸ் வீல் நிறுவனம் சண்டிகர், ஜாம்ஷெட்பூர் மற்றும் சென்னை ஓரகடம் ஆகிய இடங்களி்ல தொழிற்சாலைகளை அமைத்துள்ளது.
சண்டிகர் மற்றும் சென்னை ஆலையில் கார்களுக்கான ஸ்டீல் வீல்களும், ஜாம்ஷெட்பூர் ஆலையில் டிரக்குகளுக்கான ஸ்டீல் வீல்களும் தயாரிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், ஆண்டுக்கு 25 லட்சம் ஸ்டீல் வீல்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சென்னை ஓரகடம் ஆலையை ஆண்டுக்கு 60 லட்சம் ஸ்டீல் வீல்கள் தயாரிக்கும் வகையில் அந்த நிறுவனம் விரிவாக்கம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








