இந்திய கார் சந்தையில் 'மஜா'அடிக்க மஸ்தா திட்டம்

இந்திய வாகன சந்தைக்கு மஸ்தா புதிதல்ல. ஸ்வராஜ் நிறுவனத்துடன் இணைந்து லோடுவேன் தயாரிப்பில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும், இந்திய கார் சந்தையில் இப்போதுதான் அடியெடுத்து வைக்கிறது மஸ்தா.
இதுகுறித்து மஸ்தா நிறுவனத்தின் தலைவர் டகாஷி யமுனோஷி கூறியதாவது:
"எங்களது மஸ்தா-2 ஹேட்ச்பேக் உள்ளிட்ட சிறிய கார்கள் மற்றும் செடான் கார் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். எங்களது கார்கள் அனைத்தும் இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கருதுகிறோம். இதைத்தொடர்ந்து, பிரிமியம் செடான் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
இந்தியாவில் தனித்து கார் உற்பத்தியில் ஈடுபடுவதா அல்லது வேறு நிறுவனத்துடன் இணைந்து கார் உற்பத்தியில் ஈடுபடுவதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இதுகுறித்து பரிசீலித்து விரைவில் முடிவுகள் எடுக்கப்படும்," என்றார்.


Click it and Unblock the Notifications








