இந்த ஆண்டின் உலகின் சிறந்த காராக நிசான் லீப் தேர்வு

நியூயார்க் நகரில் சர்வதேச கார் கண்காட்சி நடந்து வருகிறது. இதில், பல்வேறு அம்சங்கள் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆண்டிற்கான சிறந்த கார்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன.
இதில், நிசான் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய லீப் எலக்ட்ரிக் கார் இந்த ஆண்டின் சிறந்த காராக அறிவிக்கப்பட்டது. எலக்ட்ரிக் காராக இருந்தாலும், செயல்திறனில் சிறப்பாக இருப்பதால் இந்த ஆண்டிற்கான சிறந்த காராக லீப் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டிற்கான கிரின் கார் விருதுக்கான தேர்வில் இந்த கார் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே வோல்ட் இந்த ஆண்டின் சிறந்த எலக்ட்ரிக் காருக்கான கிரின் கார் விருதை பெற்றுள்ளது.
இதேபோன்று, ஃபெராரி நிறுவனத்தின் 458 இட்டாலியா கார் இந்த ஆண்டின் சிறந்த செயல்திறன் மிக்க காராகவும், அஸ்டன் மார்ட்டினின் ராபிட் இந்த ஆண்டிற்கான சிறந்த வடிவமைப்பு காராகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








